Saturday, 14 January 2017

நட்சத்திரம் மற்றும் கோள்களின் தூரத்தை அளவிடுவது எப்படி?


சில நேரங்களில் நாம் பல காலம் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் உள்ள இடத்துக்கு எவ்வளவு தூரம் என்று யாராவது கேட்குக்கும்போது விடை தெரியாமல் திகைப்பது உண்டு. கூகுளை கொண்டு வெகு எளிதில் ஒரு இடத்தின் தூரத்தை இப்போது தெரிந்து கொள்கிறோம்.

ஆனால், விண்வெளியில் தொலை தூரத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் கோள்களின் தூரத்தை எவ்வாறு அறிவது? இந்த கேள்வியை கேட்கும்போதே உங்கள் மனதில் இது ஒரு கடினமான தொழில்நுட்பம் வாயிலாகவே சாத்தியம் என்று யூகித்துஇருப்பீர். ஆனால், உண்மையில் இது ஒரு சாதாரண விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படையில் கண்டுஅறியப்படுகிறது என்று தெரிந்தால் ஆச்சர்யம் கொள்வீர்.

பூமியில் தூரத்தை கிலோமீட்டர் அல்லது மைல் அளவில் தெரிந்துகொள்கிறோம். மிகுந்த தூரம் காரணமாக இந்த அளவு கொண்டு நட்சத்திரம் மற்றும் கோள்களின் தூரத்தை அறிவது கடினம். எனவே, ஒளி ஆண்டு என்ற அளவு பயன்படுகிறது. ஒளி ஒரு வினாடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் வரை செல்லும். இந்த  அசுரவேகத்தில் ஒளி ஒரு ஆண்டு காலம் எவ்வளவு தூரம் செல்லுமோ  அதுவே ஒளி ஆண்டு என்று அளவிடப்படுகிறது. எனவே, விஞ்ஞானிகள் நட்சத்திர தூரத்தை 4 ஒளி ஆண்டு அல்லது 50 ஒளி ஆண்டு என்றே குறிப்பிடுகின்றனர். இந்த ஒளி ஆண்டை அவர்கள் எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

நாம்  இரண்டு கண்கள் கொண்டு ஒரு பொருளை பார்க்கும்போது நமது மூளை  கண்களிலிருந்து வரும் தகவலை கொண்டு   அந்த பொருள் இருக்கும் நிலையை அறிகிறது. இப்போது, நாம் ஒரு கண்ணை மூடியவாறு அதே பொருளை பார்த்தால் அது தன்னுடைய இடத்திலிருந்து சற்றே தள்ளி இருப்பதாய் தோன்றும். அதே போல், மற்றொரு கண்ணை மூடி கொண்டு பார்த்தால் எதிர்புறம் சற்றே தள்ளி இருப்பதாய் தோன்றும். இதன் பெயர் இடமாறு எனப்படும். ஆங்கிலத்தில் இது Parallax எனப்படும். இந்த இடமாறு தொழில்நுட்பத்தை (Parallax Technique) கொண்டே ஒளி ஆண்டுகள் கணிக்கப்படுகிறது.

பூமி சூரியனை சற்றே நீள்வட்ட பாதையில் சுற்றி வருவது நாம் அறிந்ததே. இந்த சுற்று பாதையின் விட்டம் சுமார் 30 கோடி கிலோமீட்டர். சூரியன் தனது சுற்று பாதையில் ஒரு இடத்தில் இருப்பதாக கருதுவோம். இந்த நிலையில் தொலை தூரத்தில் உள்ள நட்சத்திரத்தை டெலெஸ்கோப் மூலம் பூமிக்கும் அதற்கும் உள்ள கோணத்தை குறித்துக்கொள்வர். ஆறு மாதம் கழித்து பூமி தனது சுற்று பாதையில் நேரெதிர் வரும்போது மீண்டும் கோணத்தை குறித்துக்கொள்வர். இரண்டு அளவுக்கும் உள்ள வித்தியாசம் மொத்த கோணத்தை கொடுக்கும். அதில் சரி பாதி அளவு எடுத்து 'p' என்ற கோண அளவு கிடைக்கும். இது தெரிந்தால் போதும், நட்சத்திர தூரத்தை  d = 1/p என்ற சூத்திரம் மூலம் கண்டுபிடுத்துவிடலாம்.



 மேற்குறிய  முறை பெரும்பாலும் பயன்படுகிறது என்றாலும் 400 ஒளி ஆண்டுகள் மேல் தூரத்தை இம்முறை கொண்டு அளக்கமுடியாது. அதற்கு மேல் சென்றால் நட்சத்திரங்களின் ஒளி அளவை கொண்டு தூரம் கண்டறியப்படுகிறது.

1 comment:

  1. இந்த பதிவை படித்தேன். மிக எளிதாக , புரியும் முறையில் எழுதப்பட்டிருக்கிறது. நன்று 👌👍

    ReplyDelete